டிஸ்கி: இவை என் சொந்த கருதுதுக்கள் மட்டுமே. நான் என்ன சின்னதிரைலையா வந்து விமர்சனம் சொல்றேன். என் ப்ளாக் ல தானே எழுதறேன். விடுங்க விடுங்க பாஸ்! ஏதோ முந்நூறு ரூபா ஒரு டிக்கெட் க்கு கொடுத்த வேகத்துல எழுதறேன். என்ன தான் தலைவருக்காக படத்த ரசிச்சாலும் பாழும் மனசு சும்மாவிடுதா.
- ரஜினிகாந்த், இனி அமிதாப் பச்சன் போல தன வயதுக்கு தகுந்த பாத்திரங்களில் மட்டுமே நடித்தால் நன்றாக இருக்கும்.
- தமிழ் திரை உலக பாடலாசிரியர்கள் இனி தங்கள் பாடல் வரிகள் புரியுமாறு இசைஅமைத்தால் மட்டுமே A R ரஹமானின் இசையமைப்பில் பாடல்கள் எழுதுவோம் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.
- A R ரஹமான் வெறும் synthesizer - ஐ மட்டும் நம்பாமல், நம் பாரம்பர்யம் மிக்க தாளவாதியங்கள் மற்றும் தந்தி வாதியங்களையும் உபயோகித்தால் நன்றாக இருக்கும். (என்ன இருந்தாலும் ராஜா ராஜா தான்!)
- சூப்பர் ஸ்டார் தான் உபயோகிக்கும் லிப் ஸ்டிக்கின் அளவை குறைத்தால் நன்றாக இருக்கும்.
- இயக்குனர் ஷங்கர், தன முந்தைய படங்களான முதல்வன் மற்றும் இந்தியனில் இருந்தது போல costume களில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். (ஐஸ்வர்யா ராயின் உடைகள் சகிக்கவில்லை!)
- சந்தானம், பாஸ் என்கிற பஸ்கரனில் நடித்தது போல நல்ல சிரிக்க மற்றும் ரசிக்கத் தகுந்த பாத்திரங்களில் மட்டும் நடித்தால் நன்றாக இருக்கும்.
- கடைசியாக, (last but definitely not the least), ஐஸ்வர்யா ராய் தயவு செய்து நடிப்பதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். ஹ்ம்ம்... நாம ஆசைப் படரதேல்லாம் நடந்துடுதா என்ன!