வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

அந்நியன் ஆன ஆனியன்

மு.கு. :
) இந்தப் பதிவு பள்ளிக்கால நினைவுகளை எழுதுமாறு கேட்டிருந்த என் நண்பர்களுக்காக.
)ஆனியனுக்கும் பள்ளிக்கால நினைவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று வியப்பவர்களுக்கு விடை, பதிவின் முடிவில்.
)அந்த சம்பந்தத்தை பதிவின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தவர்கள், நமது பள்ளி தாளாளர் பிறந்தநாள் அன்று பள்ளி சென்று லட்டை பரிசாக பெற்றுக்கொள்ளவும்.

எங்கள் பள்ளியில் பயாலஜி பிரிவின் தலைவர் திருமதி. அக்கம்மா தாமஸ். இவரை எங்கள் எல்லாருக்கும் 'மிகவும் பிடிக்கும்'. எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு ஒரு உதாரணம். எல்லோரும் தம் பள்ளி ஆசிரியர்களுக்கு புனைப்பெயர் வைப்பார்கள். நாங்கள் ஒரு படத்தின் பாடலையே அவருக்காக மாற்றி எழுதி இருந்தோம். அது தளபதி படம் வந்த புதிது. அப்படத்தில் வரும் 'ராக்கம்மா கைய தட்டு' பாடலையே நாங்கள் ' அக்கம்மா கைய தட்டு' என்று மாற்றி படும் அளவுக்கு அவர் மேல் பிரியம். இத்தனைக்கும் அவர் எங்களையெல்லாம், "I will fix you in the practicals" என்று அன்பைப் பொழிந்ததெல்லாம் இல்லை! (மேற்சொன்னவாறு அன்பைப் பொழிந்த அருணா மிஸ்ஸைப் பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.) இவரை மட்டும் அல்ல. பயாலஜி பிரிவில் இருந்த மற்ற ஆசிரியர்களான 'கண்ணாடி' சுரேஷ் சார் மற்றும் எலிகேசி என்று அன்புடன் அழைக்கப்பட்ட புலிகேசி சேனாபதி சாரையும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இப்போது ஆனியனுக்கு வருவோம். இவ்வாறு நாங்கள் பேரன்பு கொண்டிருந்த அக்கம்மா மிஸ் ஒரு மலையாளீ. அவர் ஆனியனுக்கு கொடுத்திருந்த மற்றொரு "பயாலாஜிகல்" பெயரே அணியன். அவரின் முதல் வகுப்பே எங்களுக்கு ஆனியனைப பற்றியது தான். அவரின் உச்சரிப்பு புரியாததாலும், அதுவரை பாட புத்தகம் (எப்போதும் போல்) வெளிவராததாலும் அணியன் எது என்று எங்களுக்கு பல நாட்க்களுக்கு புரியாமல் போய் ஒரு வித பயாலஜிகல் ஜுரமே வந்து விட்டது. பயாலஜி பய அலர்ஜி ஆகிப்போனது. பின்னர் பாட புத்தகம் வந்ததும், நாங்கள் முதலில் பிரித்துப் படித்தது அணியன் தான். அன்று நாங்கள் சிரித்த சிரிப்பு.... ஜுரம் விட்டதால் வந்த சிரிப்பு!!!

இந்த நிகழ்ச்சியின் பின், அணியன் எனப்பட்ட ஆனியனை என்றும், எப்போதும், எந்த வடிவிலும் பார்த்தாலும் எனக்கு அக்கம்மா மிஸ்ஸின் ஞாபகம் தவறாமல் வரும். இப்படிப்பட்ட அக்கம்மா மிஸ்ஸை நான் சிலவருடங்களாக மறந்து போனேன். அதுவும் என் மகளால். அவளுக்கு எந்த உணவிலும் வெங்காயம் ஏனோ பிடிக்காமல் போனது. (ஒரு வேளை அவளுக்கும் அக்கம்மா என்ற பெயரில் யாராவது ஒரு டீச்சர் வந்தால் அதன் பின் பிடிக்கலாம்!) அதனால் நாங்கள் எங்கள் உணவில் பெருமதிப்பிற்குரிய ஆனியனை தவிர்த்தோம். இவ்வாறாக, அணியன் எனப்பட்ட ஆனியன் எங்களுக்கு அந்நியனாகிப் போனது!2 கருத்துகள்:

 1. Viji Super andha biology miss face also I remember very clearly. Thanks for taking us to Stjohns babanagar

  பதிலளிநீக்கு
 2. வீடு நல்லா இருக்கு. இது என்ன ஹாலிடே ஹோமா? ஆறுமாசத்துக்கொருமுறைதானா?

  குறைஞ்சது வாரம் ஒன்னுன்னு பதிவு போடுங்க. தமிழ்மணத்துலே சேர்த்துருங்க. வட்டம் பெருகும்.
  பட்டையும் போடலாம்.

  வாழ்த்து(க்)கள்.

  பதிலளிநீக்கு