நாளை ஆசிரியர் தினம்.
ஆசிரியப் பணியின் மேல் கொண்டிருந்த தீரா ஆசையினால் எம்.சி.எ முடித்த பின்னரும் என்.ஐ.ஐ.டி யில் faculty ஆகா சேர்ந்தேன். இன்று பல்வேறு காரணங்களால் ஆசிரியப் பணியில் தொடர முடியா விட்டாலும் என்றாவது ஒரு நாள் மீண்டும் அத்துறைக்கு செல்ல வேண்டும் என்ற தாகம் என்னுள் இன்னும் இருக்கிறது. இன்று என்னுடைய எத்தனை மாணவர்கள் என்னை நினைத்துக் கொள்கிறார்களோ எனக்கு தெரியாது. ஆனால் இதோ நான் நினைத்துக்கொள்ளும் என்னுடைய ஆசிரியர்கள்!!!

- எல்.கே.ஜி யில் எனக்கு உணவு ஊட்டி அன்பு செலுத்திய காஞ்சனா மிஸ்
- முதல் வகுப்பெடுத்த வாசுகி மிஸ்.
- "நீங்க என்ன ஜாதி?" என்று அறியா வயசில் நான் கேட்ட கேள்விக்கும் "நான்பெண் ஜாதி" என்று புன்னகை மாறாமல் பதில் சொன்ன சங்கமித்ரா மிஸ்.
- அன்றே என்னுள் இருந்த தமிழார்வத்தை புரிந்து கொண்டு என்னை தமிழ்வகுப்புக்கு லீடர் ஆக்கிய ஜெயலக்ஷ்மி மிஸ்
- ஏழாம் வகுப்பில் நான் மிகவும் வெறுத்த பள்ளியில் படித்த போதும் என் மீது அன்புசெலுத்திய ரத்னா ஜோசப் மிஸ்
- எட்டாம் வகுப்பில் முதல் முறையாக 'கான்வென்ட்' பள்ளியின் புதியசூழ்நிலையில் சேர்ந்த போது என்னை அரவணைத்த ஆங்கில டீச்சர் ஸ்டெல்லாமிஸ்
- எனக்கு மிகவும் பிடிக்காத பாடமான கணிதத்தை எனக்கு மிகவும் பிடிததாக்கியஉமா அக்கா
- கண்டிப்பான மாலா மிஸ்
- "எங்கோ பொணம் எரியுதுலே" என்றவாறு போர் அடிக்கும் ஜாக்ரபியையும் ஒருபாடமாக எங்களுக்கு கற்று தர பிரயத்தனப் பட்ட செபஸ்டின் சார்
- container contains water, water contains molecules என்று மறக்க முடியாத படி பாடம்எடுத்த சம்பத் சார்
- ப்ரிசம் உடைததற்க்காக என்னைக் காய்ச்சி எடுத்த பலராமன் சார்
- ஏனோ என்னை பிடிக்காமல் போன அருணா மிஸ்
- என் தமிழார்வத்துக்கு மேலும் ஊன்று கோலிட்ட லிடியா மிஸ்
- ஒவ்வொரு மாணவரையும் தனித் தனியாக அறிந்திருந்த, அன்பு கொண்டிருந்த, ஆசிரியப் பணியின் மீது பெரு மதிப்புக் கொண்டிருந்த எங்கள் பிரின்சிபால் மிராசு டேவிட் சார்
- இவர்கள் எல்லோருக்கும் மேலாக, என்னை எனக்கு உணர்த்தி, என் திறமைகளை வெளிக் கொணர்ந்த என் மதிப்பிற்குரிய ப்ரோடோ மிஸ்.
உணர்ச்சி மிகுதியில் ஓரிருவரை நான் இங்கு விட்டிருந்தாலும் அவர்களும் என் நினைவில் அவ்வப்போது வந்து போக தவறியதில்லை.
இதே போல, நான் பாடம் நடத்திய யாரேனும் ஒரு மாணவருக்கவது நான் இவ்வாறு நினைவிற்கு வந்திருப்பேனா?
இது ஒரு ஆசிரியையின் எதிர்பார்ப்பு!!!!
Good remember, you will remembered by your students, if you are sinsere, love and affection at sametime grip also need. then you will also have remembered forever.
பதிலளிநீக்கு