ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ரங்கமணிக்கு நன்றி

எங்க வீட்டு ரங்கமணி புண்ணியத்துல போன வாரம் ஒரு கேரளா ட்ரிப் அடிச்சுட்டு வந்தோம். பரவாயில்ல மனுஷன் நல்லாவே கார் ஓட்டறாரு. மலைப்பாதைல கூட ஜாலியா பாட்டு பாடிட்டே ஒட்டினாறு. நமக்கு தான் மோதல் கொஞ்ச நேரத்துக்கு பயத்துல ஜுரம் வந்துடுச்சு. ஆனா நாம வெளில காமிப்பமா??!!! ரொம்ப தைர்யமா கூடவே பாடிட்டே வந்தோம்ல!

மொதல்ல குருவாயூர் போய் ஒரு நாள் தங்கி சாமி தரிசனம் செஞ்சுட்டு அப்படியே குருவாயூரையும் சுத்திப் பார்த்தோம். அடுத்தநாள் காலைல ஜி பி எஸ் உதவியோட அதிரப்பள்ளி போயிட்டு அப்படியே திரிச்சூர் வந்து வடக்கு நாதரைப் பார்த்துட்டு கெளம்பி வந்தோம்.

ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பிரேக். தேங்க்ஸ் டு ரங்கமணி!!

ட்ரிப் பத்தின விரிவான செய்திகள அடுத்த பதிவுல போடறேன்.

4 கருத்துகள்:

  1. குருவாயுருக்குப் போனா கண்டிப்பா மகாதேவர் சன்னதிக்கு போகனும், இது குருவாயூர் சன்னதியில் ஒரு பலகை மாட்டி வைத்து இருப்பார்கள் அப்படி போக முடியாதவர்கள் அங்க இருந்து சாமி கும்பிட ஒரு படமும் வைத்து இருப்பார்கள். நல்ல பெரிய கோவில்.
    திருச்சூர் வடக்கு நாத சுவாமி கோயில் மிகவும் பெரியது, அங்க நான் அலுவலக விசயமாக பத்து நாள் பயணத்தின் போது அங்கு உற்சவ சமயம். அப்போதுதான் நான் மஞ்சு வாரியாரின் நடன நிகழ்ச்சியும் , அப்போது முதல்வர் அ.கே. அந்தொனி அவர்களையும் பார்த்தேன். ஏங்க பக்கத்தில் சேட்டானிக்கரை பகவதி கோவில், கொடுங்கலூர் பகவதி கோவில் மற்றும் காலடி போயிருக்கலாம் இல்லை? பரவாயில்லை அடுத்த முறை செல்லும்போது கட்டாயம் சென்று பாருங்கள். அப்புறம் நேந்திர சிப்ஸ் மற்றும் கேரளா அல்வா எங்க?

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி பித்தன்.
    மகாதேவர் கோயில்னா நீங்க மம்மியூர் கோயில சொல்றீங்கன்னு நெனைக்கறேன். அந்தக் கோயிலுக்கும் போனோம். ஆனா புடவ கட்டின தான் விடுவேன்னுட்டாங்க. அதனால ரங்கமணியும் மகளும் மட்டும் உள்ள போய் தரிசனம் செஞ்சாங்க. நான் வெளியில இருந்தே ஒரு சல்யுட் அடிச்சுட்டேன். மொத்தமே நாலு நாள் தான் பிளான் பண்ணதால மத்த கோயில்லாம் போக முடியல. ஆனா மறுபடி ஒரு ட்ரிப் கண்டிப்பா அடிக்கனும்கர முடிவோட தான் இருக்கோம்.
    அப்ப போகும் போது உங்க கிட்ட தகவல் கேட்டுக்கறேன்.

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக கேரள கோவில்களுக்கு செல்வது என்றால் புடவையும், ஆண்கள் வேஸ்டி,அங்கவஸ்த்திரம் அல்லது பெரிய ஈரிலைத்துண்டு எடுத்துச் செல்வது நலம்.பெரும்பாலான கோவில்களில் புடவை கட்டாமல் சென்றால் விடமாட்டார்கள். ஒருமுறை நயந்தாரவையும் வாசலில் திருப்பி அனுப்பிவிட்டார்கள். குருவாயுரில் ஒருமுறை பைஜாமா குர்தாவில் இருந்த இராஜிவ் காந்தியை திருப்பி அனுப்பிவிட்டார்கள். இத்தனைக்கும் அவர் பிரதமர்.

    பதிலளிநீக்கு
  4. கேரளா கோவில்களுக்கு செல்வது என்றால் கையில் வேஷ்டி, அங்கவஸ்த்திரம் அல்லது துண்டு, புடவை அவசியம். இல்லாவிட்டால் உள்ளே விடமாட்டார்கள். பைஜாமா ஜிப்பாவில் வந்ததால் இராஜிவ் காந்தியைக் கூட குருவாயூர் கோவிலில் அனுமதிக்க வில்லை. சமயம் கிடைக்கும்போது என் சமையல் பதிவுகளைப் படிக்கவும். கண்டிப்பாய் உங்களுக்கு மிகவும் புடிக்கும்.
    அப்புறம் என்ன ஸ்கோதரி மாதம் ஒரு பதிவுதான் போடுவிங்களா? நிறைய எழுதுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு